TNPSC Thervupettagam
March 28 , 2024 242 days 281 0
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், பட்ஜெட்ஸ் தவளையில் உற்பத்தி செய்யப்படும் பெப்டைடுகள் (குறு புரதம்) நோயை உண்டாக்கும் நோய்க் கிருமிகளின் நொதிகளை எதிர்த்துப் போராடும் தன்மையினைக் கொண்டுள்ளதாக அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த இரு வாழ்விகளின் தோலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பெப்டைடுகள் (குறு புரதங்கள்) தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உட்பட சுற்றுச்சூழலில் உள்ள சாதகமற்றச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளதன் காரணமாக நீண்ட காலமாக அவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த தவளையின் உடலில் சுரக்கும் பெப்டைடு, நோய்க்கிருமிகளால் உற்பத்தி செய்யப் படும் சப்டிலிசின் கார்ல்ஸ்பெர்க் மற்றும் புரோட்டினேஸ். K எனப்படும் இரண்டு முக்கிய நொதிகளைத் தடுக்கிறது.
  • தென் அமெரிக்காவில் காணப்படும் பட்ஜெட்ஸ் தவளை, அதன் நுண்ணறிவு சார்ந்த நடத்தை காரணமாக பல நாடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறது.
  • தவளைகள் தங்கள் தோலின் மூலம் தற்காப்பு அமைப்பினை உருவாக்கியுள்ளன.
  • அவை தனது தோல்கள் மூலம் பொதுவாக நுண்ணுயிர்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை எதிர்க்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்