TNPSC Thervupettagam

பட்டினி நிலை அதிகம் நிலவும் பகுதிகள் – FAO/WFP அறிக்கை

June 3 , 2023 412 days 289 0
  • 'பட்டினி நிலை அதிகம் நிலவும் பகுதிகள் - கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை குறித்த உணவு மற்றும் வேளாண் அமைப்பு - உலக உணவுத் திட்ட அமைப்பின் முன் எச்சரிக்கைகள்' என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • பாகிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சிரிய அரபுக் குடியரசு ஆகியவை அதிக தீவிரம் கொண்ட முக்கியப் பகுதிகளாக உள்ளன.
  • இந்த எச்சரிக்கையானது மியான்மர் நாட்டிற்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • 22 நாடுகளில் உள்ள 18 பகுதிகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அதன் பரவல் மற்றும் தீவிரத்தன்மையினை அதிகரிக்கக்கூடும்.
  • ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அதிகப் பாதிப்புகளை (கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ள) எதிர் கொள்ளும் நிலையில் உள்ளன.
  • ஹைதி, சஹேல் (புர்கினா பாசோ மற்றும் மாலி) மற்றும் சூடான் ஆகியவை மிக அதிக கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ள நாடுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்