TNPSC Thervupettagam

பட்ரட்டு மிகப்பெரிய வெப்ப மின்னாற்றல் திட்டம்

May 28 , 2018 2377 days 666 0
  • தேசிய வெப்ப மின்னாற்றல் கழகத்தின் (NTPC) நிலக்கரி அடிப்படையிலான பட்ரட்டு மிகப்பெரிய வெப்ப மின்னாற்றல் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு (2400 MW) ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்தத் திட்டமானது, ஜார்க்கண்ட் மாநில அரசு மற்றும் NTPCயின் துணை நிறுவனமான பட்ரட்டு வித்யுத் உத்பன்டன் நிகாம் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான 74 : 26 என்ற அளவிலான நிதியளிப்புடன் கூடிய கூட்டுச் செயல்பாட்டுத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றிற்கான ஒப்பந்தம் BHEL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம், 85% அளவிலான மின்னாற்றலை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வழங்குவதோடு பிரதம மந்திரி சகஜ் பிஜ்லி ஹர்கார் யோஜனா (சவுபாக்யா) திட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள வீடுகளுக்கு 24x7 மின்சாரம் வழங்கப் படுவதை உறுதி செய்கிறது.
  • இத்திட்டமானது, ESP, FGD மற்றும் Nox உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற புதிய வெளியீட்டு வரைமுறைகளுடன் ஒத்திசைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்