இந்திய ரிசர்வ் வங்கியானது 2 மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப் படும் தனது பணக் கொள்கை குறித்த மறு ஆய்வுக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
இது ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4% என்ற அளவில் வைக்க முடிவு செய்துள்ளது.
ரெப்போ விதிதம் என்பது ரிசர்வ் வங்கி ஆனது வங்கிகளுக்குக் கடன் தரும் ஒரு விகிதம் ஆகும்.
தலைகீழ் ரெப்போ விகிதமும் மாற்றப் படாமல் 3.35% என்ற அளவிலும் மேம்பட்ட கடன் வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் ஆகியவையும் மாற்றப் படாமல் 4.25% என்ற அளவிலும் வைக்கப் பட்டுள்ளன.