TNPSC Thervupettagam

பணப்புழக்கப் பரவு விகிதம் பராமரிப்பு

January 16 , 2022 1045 days 439 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பணப்புழக்கப் பரவு விகிதத்தை (LCR - Liquidity Coverage Ratio) பராமரிக்க வங்கிகளுக்கான வரம்பை அதிகரித்துள்ளது.
  • இது 5 கோடி ரூபாய் முதல் 7.5 கோடி ரூபாய் வரை நிதி அல்லாத சிறு வணிக வாடிக்கையாளர்களிடமிருந்துப் பெறப்பட்ட வைப்புத் தொகை மற்றும் பிற ‘நிதி நீட்டிப்பு’ மீது இருக்கும்.
  • பிராந்திய கிராமப்புற வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள் மற்றும் பண வழங்கீட்டு வங்கிகள் (Payments Banks) தவிர மற்ற அனைத்து வணிக வங்கிகளுக்கும் இது பொருந்தும்.
  • இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை வங்கிகள் மேற்பார்வைக்கான பேசல் குழுவின் தரநிலையுடன் இணங்கி, பணப்புழக்கச் சிக்கல்களை வங்கிகள் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
  • பணப்புழக்கப் பரவு விகிதமானது சாத்தியமான பணப்புழக்கத் தடைகளுக்கு வேண்டி வங்கிகளின் குறுகிய கால மீட்சியை ஊக்குவிக்கிறது.
  • 30 நாட்கள் என்ற கால அளவு நீடிக்கும் கடுமையான அழுத்த சூழ்நிலையைத் தாக்குப் பிடிக்க போதுமான உயர்தரத்திலான  அதிகப் பணப் புழக்கம் கொண்ட சொத்துக்கள்  அவர்களிடம் இருப்பதை இது உறுதி செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்