TNPSC Thervupettagam

பணமற்ற பரிவர்த்தனைகள் – மின்னணு தேசிய விவசாயச் சந்தை

December 19 , 2017 2533 days 878 0
  • மின்னணு தேசிய விவசாய சந்தையின் [electronic National Agriculture Market (e-NAM)] தேசிய இணைய வாயிலோடு இணைக்கப்பட்ட 470 மண்டிகள் நேரடியான பணமற்ற பரிவர்த்தனை மேற்கொள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை அரசு ஈடுபடுத்தியுள்ளது.
  • தற்சமயம், இந்த விவசாயச் சந்தையில் பங்கேற்பவர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை மரபார்ந்த முறைகளான வங்கிக் கிளைகள், பற்று அட்டைகள் மற்றும் இணைய வங்கிச் சேவைகள் மூலம் செய்து வருகின்றனர்.
  • ஐசிஐசிஐ வங்கி பீம் (Bharat Interface for Money) மற்றும் ஒருங்கிணைந்த பணம் செலுத்து தளம் (Unified Payments Interface - UPI) ஆகிய வசதிகளை  இந்த மின்னணு தேசிய விவசாயச் சந்தையில் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஈடுபடுத்தும்.
  • “ஒரே தேசம் ஒரே சந்தை” என்ற நிலைக்கு முன்னேறும் வகையில் இந்த e-NAM இணைய வாயில் விவசாயிகளுக்கு தங்கள் பொருட்களுக்கு சிறந்த விலை நிர்ணயம் மற்றும் சந்தையில் போட்டியையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்து விவசாய சந்தைகளை புரட்சிகரமாக புதுமைப்படுத்துவதற்கு திட்டமிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்