இந்தியாவில் மட்டுமே அமைந்துள்ள அமைப்புகளில் ஒரு முழுமையான பணவழங்கீடுகள் குறித்த தகவல்களைச் சேமிக்குமாறு பணவழங்கீட்டு அமைப்பு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பணவழங்கீட்டுத் தகவல்களானது பெயர், கைபேசி எண், ஆதார் எண், ஒற்றைப் பயன்பாட்டுக் கடவுச் சொல், பயனாளர் குறியீடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
பணவழங்கீடுகள் வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தால், வெளிநாட்டு அமைப்புகளில் உள்ள தகவல்களை அழிக்க வேண்டும். இத்தகவல்களை ஒரு வேலை நாள் அல்லது 24 மணி நேரத்திற்குள் இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்.