பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்
March 20 , 2020 1715 days 580 0
பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான (payment aggregators - PA) புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான மூலதனத் தேவைகளானது ஒருவர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் போது ரூ. 15 கோடியாகக் குறைக்கப்பட்டுள்து.
பியூர் – ப்ளே எனப்படும் அசல் பணவழங்கீட்டு இடைமுக நிறுவனங்கள் ஒரு நிறுவனமாகப் பிரிக்கப்பட்டு வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கான தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களாக அடையாளம் காணப்பட இருக்கின்றன.
கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்கவும் அனைத்து KYC (Know Your Customer - உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) மற்றும் AML (Anti Money Laundering- பணமோசடித் தடுப்பு) விதிகளையும் பின்பற்றவும் PAக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அங்கீகாரத்தின் இரண்டாவது காரணியாக ஏடிஎம் ரகசியக் குறியீடு மூலம் ஆன்லைன் (நிகழ்நேர) பரிவர்த்தனைகளை PAக்கள் அனுமதிப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதை சில பணவழங்கீட்டு இடைமுக நிறுவனங்கள் ஒரு சேவையாக வழங்குகின்றன.
பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்கள்
இந்த நிறுவனங்கள் மின் வணிக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, அவற்றை வங்கிகளுடன் இணைக்கும் பணியை மேற்கொள்கின்றன.
பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் இந்த நிறுவனங்களின் சார்பாக பணம் பெறுகின்றார்கள். இவர்கள் பணத்தைத் தங்கள் கணக்குகளுக்கு மாற்றுகின்றார்கள்.
பில்டெஸ்க், சி.சி. அவென்யூ, ஃபர்ஸ்ட்டேட்டா, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, பேடிஎம் பேமென்ட் கேட்வே மற்றும் பிற நிறுவனங்கள் போன்றவை மின்வணிக நிறுவனங்களுக்கு பணவழங்கீட்டுச் சேவைகளை வழங்குகின்றன.