நிர்வாக உத்தரவின் அடிப்படையில் பேறுகால விடுப்பிற்கான கால அளவு மற்றும் வரியற்றப் பணிக்கொடை ஆகியவற்றை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா, ஊழியர்களுக்கானப் பணிக்கொடை உச்ச வரம்பு & பேறுகால விடுப்பு தொடர்பான இரு விசயங்களில் 1972ஆம் ஆண்டின் பணிக்கொடை சட்டத்தைத் (Payment of Gratuity Act) திருத்துவதற்கு தாக்கல் செய்யப்பட்டது.
பணிக்கொடை (ஊதியம்), ஒவ்வொரு வருடமும் 15 நாட்கள் என்ற கால அளவிலான தொடர்ச்சியான மற்றும் முழுமையான சேவைகளுக்கான அந்த வருட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஊதியம் உச்சவரம்புக்கு உட்பட்டது.
இந்த மசோதா, பணியில் தொடர்ந்து இருப்பதாகக் கருதப்படும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை தற்போதுள்ள 12 வாரங்களிலிருந்து மாற்றியமைக்க அரசை அனுமதிக்கிறது.
பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களுக்கு தற்போதுள்ள உச்சபட்ச அளவான ரூ.10 லட்சத்தை ரூ.20 லட்சமாக மாற்றியமைக்கவும் அரசுக்கு இந்த சட்டத் திருத்தம் உதவுகிறது.
மகப்பேறு கால விடுப்பை 26 வாரங்கள் வரை அதிகரிக்கும் மகப்பேறு பயன் சட்டத் திருத்தம் (Maternity Benefit (Amendment) Act) 2017ன் பின்னணியில் இந்த பணிக்கொடை சட்டத் திருத்த மசோதா அமலாகிறது.