TNPSC Thervupettagam

பணிநிலை மேலாண்மை

March 19 , 2018 2446 days 741 0
  • தமிழ் நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் காவல்துறைப் பொது இயக்குநருமான கே.பி.மகேந்திரன் உள்துறை செயலாளருக்கு கடுமையான கண்டனத்தோடுக் கூடிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
  • நேரடி இளவயது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில், பாராளுமன்றம் கேடர் (Cadre) அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் ஏற்படுத்திய விதிகள் மீறப்படுவதாக அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
  • இக்கடிதம் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையான ஐபிஎஸ் வகையைச் சாராத அதிகாரிகளை ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவிகளில் நியமிக்கும் தருணத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
  • பாராளுமன்றம் ஏற்படுத்திய விதிகளின்படி, தமிழ்நாட்டில் காவல் துறைக் கண்காணிப்பாளர், துணை ஆணையர் போன்ற 76 பதவிகளில் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டே அவற்றை நிரப்ப வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் அவற்றில் 54 சதவீதப் பணியிடங்களில் ஐபிஎஸ் தகுதியில்லாத அதிகாரிகள் கொண்டு நிரப்பப் படுகின்றது.
  • மாநில அரசு, மத்திய அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெறாத பட்சத்தில், ஐபிஎஸ் தகுதியில்லாத அதிகாரி 3 மாதங்களுக்கு மேல் அப்பதவிகளில் நீடிக்கக் கூடாது.
  • மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு தெளிவான வழிமுறையை வகுத்துள்ளது. அது என்னவெனில், 1954 - இந்திய காவல்பணி [கேடர்] விதிகள், 9வது விதியின் கீழ் ஐபிஎஸ் தகுதி பெறாத அதிகாரி ஐபிஎஸ் தகுதிநிலை கொண்ட அதிகாரிகள் கிடைக்கும் பட்சத்தில் அப்பதவிகளில் அத்தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்படக் கூடாது.
  • தவிர உச்சநீதிமன்ற ஆணையும் அப்பதவிகளுக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டுமென்று என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.
  • மேலும் இவ்விஷயத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றமும் ஐபிஎஸ் தகுதிபெறாத அலுவலர்கள் ஐபிஎஸ் பதவிகளில் நியமிக்கப் படுவதை ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்