பணியிடத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்குவதை சட்டப் பூர்வமாக்கியுள்ள உலகின் முதல் நாடு ஐஸ்லாந்து ஆகும்.
ஐஸ்லாந்தில் 2018-ஆம் ஆண்டின் ஜனவரி-1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இது தொடர்பான சட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் துறையின் நிறுவனங்கள் அனைத்தும், பெண்களுக்கு பாரபட்சமற்ற ஊதிய வழங்கல் நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.
மேலும் அவை பணியிடத்தில் ஊதிய விவகாரத்தில் பெண்களுக்கு எதிராக பாரபட்சமான அம்சம் எவற்றையும் பின்பற்றக் கூடாது.
இருப்பினும் பணியாளர்களின் திறன், கல்வித்தகுதி, வேலையின் செயல்திறன் வெளியீடு (Output) ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, நிறுவனங்கள் இரு பாலினத்தவரினிடையேயான ஊதியத்தில் வேறுபாட்டை ஏற்படுத்த இயலும்.
உலக பொருளாதார மன்றத்தின் உலக பாலின சமத்துவ குறியீட்டின்படி (Global Gender Equality Index), 2017ஆம் ஆண்டிற்கான குறியீட்டு பதிப்பு உட்பட ஐஸ்லாந்து தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.