TNPSC Thervupettagam

பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிவற்றிற்கான உலக தினம் - ஏப்ரல் 28

May 12 , 2018 2388 days 906 0
  • பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிவற்றிற்கான உலக தினம் என்பது பணியில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்தை ஊக்குவிப்பதற்கான வருடாந்திர சர்வதேச பிரச்சாரம் ஆகும்.
  • பணியில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கான உலக தினம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் நிலைக்கு எதிரான உலக தினம் ஆகியவை இளம் பணியாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் முறையினை ஒழித்தல் ஆகியவற்றிற்கான கூட்டுப்பிரச்சாரத்தில் முக்கியமான ஒன்றாக அமைகின்றன.

  • இந்தப் பிரச்சாரம், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் 8-வது இலக்கான அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை 2030ல் உருவாக்குதல் மற்றும் 7-வது இலக்கான அனைத்து முறையிலும் குழந்தைத் தொழிலாளர் முறையினை 2025 ஆம் ஆண்டிற்குள் ஒழித்தல் ஆகியவற்றை அடைவதற்கான செயல்களை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “இளம் பணியாளர்களின் பணிமுறை பாதுகாப்பு, ஆரோக்கியம், பாதிக்கப்படக்கூடிய நிலை” (Occupational Safety Health (OSH) vulnerability of young workers).
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்