ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கான செலவீட்டுக் கணக்காகக் கொண்டு ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவருக்கு 1 லட்சம் ரூபாயும், ஓய்வுபெற்ற துணைக் குடியரசுத் தலைவருக்கு 90,000 ரூபாயும் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக 1962 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவரின் ஓய்வூதிய விதிகள் (President's Pension Rules, 1962), 1999 ஆம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவரின் ஓய்வூதியம், வீட்டுவசதி மற்றும் பிற வசதிகளுக்கான விதிகள் (Vice-President's Pension, Housing and Other Facilities Rules, 1999) போன்றவையோடு தொடர்புடைய விதிகளைத் திருத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
4 மாதங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் முறையே ரூ 5 லட்சம் மற்றும் ரூ.4 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டது.