உலக வங்கியானது பண்டகச் (வியாபார சரக்குகள்) சந்தை கண்ணோட்டம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பானது, பொருட்களின் விலையில் வரையறுக்கப் பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிசக்திச் சந்தையில் நிலவும் பெரும் குழப்பமானது, உணவுப் பாதுகாப்பின்மையைத் தீவிரமாக்கும் என்பதால், பண்டகச் சந்தைகளில் இது "இரட்டை தாக்கத்தினை" ஏற்படுத்தக் கூடும்.
பாசுமதி வகை சாராத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையானது ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவியச் சந்தைகளை உலுக்கியது.
கச்சா எண்ணெயின் அதிக விலையும் நீடித்தால், உணவுப் பொருட்களின் விலையும் தவிர்க்க முடியாத வகையில் அதிகமாகும்.
கடுமையான எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டால், ஏற்கனவே விலை உயர்வு அறிவிக்கப் பட்ட பல வளர்ந்து வரும் நாடுகளில் உணவு விலை சார்ந்தப் பணவீக்கம் உயரும்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்—உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு—ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
உலகின் அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதப் பங்கினை இந்தியா கொண்டுள்ளது.