TNPSC Thervupettagam

பண்டகச் சந்தை கண்ணோட்ட அறிக்கை

November 4 , 2023 258 days 224 0
  • உலக வங்கியானது பண்டகச் (வியாபார சரக்குகள்) சந்தை கண்ணோட்டம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பானது, பொருட்களின் விலையில் வரையறுக்கப் பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • எரிசக்திச் சந்தையில் நிலவும் பெரும் குழப்பமானது, உணவுப் பாதுகாப்பின்மையைத் தீவிரமாக்கும் என்பதால், பண்டகச் சந்தைகளில் இது "இரட்டை தாக்கத்தினை" ஏற்படுத்தக் கூடும்.
  • பாசுமதி வகை சாராத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையானது ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவியச் சந்தைகளை உலுக்கியது.
  • கச்சா எண்ணெயின் அதிக விலையும் நீடித்தால், உணவுப் பொருட்களின் விலையும் தவிர்க்க முடியாத வகையில் அதிகமாகும்.
  • கடுமையான எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டால், ஏற்கனவே விலை உயர்வு அறிவிக்கப் பட்ட பல வளர்ந்து வரும் நாடுகளில் உணவு விலை சார்ந்தப் பணவீக்கம் உயரும்.
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்—உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு—ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • உலகின் அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதப் பங்கினை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்