TNPSC Thervupettagam

பண்டிட் பீம்சென் ஜோஷியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள்

February 9 , 2021 1264 days 546 0
  • புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியப்  பாடகர் பண்டிட் பீம்சென் ஜோஷியின் நூற்றாண்டு விழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று ஓராண்டு கால விழாவாக தொடங்கியது.
  • இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இந்தியப் பாடகர் ஆவார்.
  • இவர் காயல் (khayal) வகைப் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்றவர் ஆவார்.
  • இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் கிராணா கரானா (Kirana gharana) என்ற வகையில் புகழ்பெற்றவர் ஆவார்.
  • இவரது இசை நிகழ்ச்சிகள் நியூயார்க்கில் சுவரொட்டிகளால் விளம்பரப் படுத்தப் பட்டன.
  • இந்தியாவைச் சேர்ந்த ஓர் இசைக் கலைஞருக்கு முதல் முறையாக இவ்வாறு நடந்தது.
  • இவர் ஆண்டுதோறும் சவாய் காந்தர்வ இசை விழாவையும் நடத்தச் செய்தார்.
  • இவருக்கு 1998 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற விருது  வழங்கப் பட்டது.
  • இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை 2009 ஆம் ஆண்டில் இவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்