TNPSC Thervupettagam

பண்டைய கால சூரிய நாட்காட்டி – துருக்கி

August 21 , 2024 94 days 191 0
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான, அதாவது 12,000 ஆண்டுகள் பழமையான நாட்காட்டியினைக் கண்டறிந்துள்ளனர்.
  • தெற்கு துருக்கியில் உள்ள கோபெக்லி டெபேவில் ஒரு தூணில் சூரியன், சந்திரன் மற்றும் பல்வேறு விண்மீன் திரள்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  • பண்டைய மக்கள் சந்திர-சூரிய நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்ற இந்த நாட் காட்டியினை பருவகால மாற்றத்தை அறிந்திடப் பயன்படுத்தினர் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
  • இது ஒரு வால் நட்சத்திரம் விழும் நிகழ்வினை கூட பதிவு செய்துள்ளது.
  • கோபெக்லி டெபே தளத்தில் உலகின் மிகப் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன.
  • அவை இங்கிலாந்தின் கல் வட்டங்களை (Stonehenge) விட சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முந்தையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்