பண்டைய போபாப் மரங்களின் தோற்றத்தின் மீதான மர்மத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டி.என்.ஏ ஆய்வுகளின்படி, இந்தச் சிறப்பு மிக்க மரங்கள் முதன்முதலில் மடகாஸ்கரில் 21 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின.
அவற்றின் விதைகள் பின்னர் கடல் நீரோட்டங்கள் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், கொண்டு செல்லப்பட்டு பிறகு தனித்துவமான உயிரினங்களாக உருவாகின.
உலகின் எட்டுப் பெருக்க மர இனங்களில் ஆறு இனங்கள், மாபெரும் அடிமரங்களை கொண்டத் தனித்துவமான மரங்கள் வரலாற்று ரீதியாக பெரிய காடுகளில் வளர்ந்து வருகின்ற மடகாஸ்கரைப் பூர்வீகமாக கொண்டுள்ளன.
பெரும்பாலும் போபாப் மரங்கள் 1,000 ஆண்டுகள் வாழக் கூடியவை என்பதோடு, ஒரு ஹெக்டேர் நிலத்தில் முழுமையாக வளர்ந்த எட்டு போபாப் மரங்கள் வளரும்.
மடகாஸ்கரில் அதான்சோனியா பெரேரி எனப்படும் உலகின் அரிதான போபாப் மரம் காணப் படுகிறது.
மாபெரும் லெமூர்ஸ் அல்லது மாபெரும் ஆமைகள் போன்ற பெரிய உடல் கொண்ட விலங்குகள் போபாப் மரங்களின் விதைகளை அவற்றின் சாணத்தின் மூலமாகப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தன.
ஆனால் அவை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டன.
இந்த விலங்குகள் இல்லாமல், பெருக்க மரங்களின் விதைகள் திறம்பட்ட முறையில் பரவாது.