மகரந்தத் தூள்களின் பகுப்பாய்வு ஆனது, ஆப்பிரிக்காவில் இருந்த ஆதி மனிதர்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா போன்ற பகுதிகளுக்கு எப்படி இடம்பெயர்ந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
அதிகரித்த வெப்பநிலையானது சைபீரியா வரை காடுகள் பரவ வழி வகுத்து, அங்கு ஆதி மனிதர்கள் இடம்பெயர்வதை எளிதாக்கியதாக மகரந்தத் தூள் தரவு குறிப்பிடச் செய்கிறது.
அவர்கள் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியைச் சுற்றியுள்ள ப்ளீஸ்டோசீன் காலத்திய தாவரச் சமூகங்களை அந்தப் பகுதியில் உள்ள ஹோமோ சேபியன்ஸின் பழமையான தொல்பொருள் தடயங்களுடன் ஒப்பிட்டனர்.
ப்ளீஸ்டோசீன் காலம் ஆனது இரண்டு மில்லியன் முதல் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், மனித பரிணாம வளர்ச்சியின் காலமாகவும் கருதப்படுகிறது.
ஏறத்தாழ 45,000-50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த புலம் பெயர்வு நிகழ்வில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது.