TNPSC Thervupettagam

பண்படுத்தப்படாத எஃகு தயாரிப்பு

January 31 , 2018 2343 days 778 0
  • உலக எஃகு சங்கம் (World Steel Association) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2017-ஆம் ஆண்டில் எஃகு தயாரிப்பில் அமெரிக்காவை பின்தள்ளி உலகின் மூன்றாவது மிகப்பெரிய எஃகு தயாரிக்கும் நாடு என்ற இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
  • இந்தியா 2016-ஆம் ஆண்டு 786 மில்லியன் டன்கள் எஃகினை தயாரித்திருந்தது. 2017-ஆம் ஆண்டு2% வளர்ச்சி பெற்று மொத்தம் 831 மில்லியன் டன்கள் எஃகினை உற்பத்தி செய்துள்ளது.
  • ஜப்பான் உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட ஜப்பானில் எஃகு உற்பத்தி1% குறைந்துள்ளது.

உலக எஃகு சங்கம்

  • உலக எஃகு சங்கமானது (World Steel Association) இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது உலகின் மிகப் பெரிய தொழிற்துறை சங்கங்களில் ஒன்றாகும்.
  • இச்சங்கம் ஜூலை 1967 அன்று நிறுவப்பட்டது.
  • இச்சங்கத்தின் தலைமையிடம் பெல்ஜியத்தின் தலைநகரான   புருசல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
  • இச்சங்கத்தின் உறுப்பினர்கள் உலகின் 85% எஃகினை உற்பத்தி செய்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்