உலக எஃகு சங்கம் (World Steel Association) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2017-ஆம் ஆண்டில் எஃகு தயாரிப்பில் அமெரிக்காவை பின்தள்ளி உலகின் மூன்றாவது மிகப்பெரிய எஃகு தயாரிக்கும் நாடு என்ற இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்தியா 2016-ஆம் ஆண்டு 786 மில்லியன் டன்கள் எஃகினை தயாரித்திருந்தது. 2017-ஆம் ஆண்டு2% வளர்ச்சி பெற்று மொத்தம் 831 மில்லியன் டன்கள் எஃகினை உற்பத்தி செய்துள்ளது.
ஜப்பான் உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட ஜப்பானில் எஃகு உற்பத்தி1% குறைந்துள்ளது.
உலக எஃகு சங்கம்
உலக எஃகு சங்கமானது (World Steel Association) இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது உலகின் மிகப் பெரிய தொழிற்துறை சங்கங்களில் ஒன்றாகும்.
இச்சங்கம் ஜூலை 1967 அன்று நிறுவப்பட்டது.
இச்சங்கத்தின் தலைமையிடம் பெல்ஜியத்தின் தலைநகரான புருசல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
இச்சங்கத்தின் உறுப்பினர்கள் உலகின் 85% எஃகினை உற்பத்தி செய்கின்றனர்.