பல்வேறு நலத்திட்டங்களில் சரியான பயனாளிகளைச் சென்றடையும் வரை அரசுக் கருவூலத்தில் இருந்து நிதி வழங்கப்படுவதைத் திறம்படக் கண்காணிக்க பண வழங்கீட்டு வங்கி உரிமத்தைப் பெறத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம், சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகாமல் மற்றும் தாமதமாகாமல் இருக்க வேண்டி மாநில நிதித் துறையால் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.