உச்ச நீதிமன்றமானது சட்டத்தின் படி, அட்டவணை சாதியிய மற்றும் அட்டவணைப் பழங்குடியின (Scheduled Caste / Scheduled Tribe) பணியாளர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை மேற்கொண்டு பின்பற்றுவதற்கு மத்திய அரசை அனுமதித்துள்ளது.
மத்திய அரசின் சார்பாக, கூடுதல் சோலிசிடர் ஜெனரல் மணிந்தர் சிங் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயக்கூறுகளின் படி, நிலுவையில் உள்ள பதவி உயர்வு விவகாரங்களில் அட்டவணை சாதியிய மற்றும் அட்டவணைப் பழங்குடியினப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற அனுமதிக்குமாறு வேண்டினார்.
அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றமானதுநாகராஜ் வழக்கில் (M Nagaraj Case -2006) 2006-ஆம் ஆண்டு ஓர் தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, கிரீமி லேயர் எனும் கருத்தானது (Creamy layer concept) அட்டவணை சாதியிய மற்றும் அட்டவணைப் பழங்குடியினருக்குப் பொருந்தாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 16 (4A)-ன் மூலம் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.