TNPSC Thervupettagam

பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் முழுமையான எண்ணிக்கை

May 30 , 2024 50 days 149 0
  • பொதுத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் (EC) சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்த மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • முன்னதாக, வாக்குச்சாவடி வாரியான வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கொண்ட 17C படிவத்தின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • அசாமில் உள்ள துப்ரி தொகுதியில் அதிக வாக்குகள் (24.5 லட்சம்) பதிவானது.
  • லட்சத்தீவில் குறைந்த வாக்குகள் (48,630) பதிவாகியுள்ளன.
  • வாக்குப் பதிவு எண்ணிக்கை:
    • முதல் கட்டமாக 11,00,52,103 வாக்குகள் (மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 16,63,86,344)
    • இரண்டாம் கட்டமாக 10,58,30,572 வாக்குகள் (மொத்த வாக்காளர்கள் 15,86,45,484),
    • மூன்றாவது கட்டமாக 11,32,34,676 வாக்குகள் (மொத்த வாக்காளர்கள் 17,24,04,907),
    • நான்காவது கட்டமாக 12,24,69,319 வாக்குகள் (மொத்த வாக்காளர்கள் 17,70,75,629), மற்றும்
    • ஐந்தாம் கட்டமாக 5,57,10,618 வாக்குகளும் பதிவானது (மொத்த வாக்காளர்கள் 8,95,67,973).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்