TNPSC Thervupettagam

பதிவு செய்யாமலிருக்கும் வாராக் கடன்

May 19 , 2019 1889 days 615 0
  • யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகிய மூன்றும் “வாராக் கடன்” குறித்த மதீப்பீட்டில் “டைவர்ஜன்ஸ்” (விலகல்) நிலையில் உள்ளதாக அறிவித்து இருக்கின்றன.
  • இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது பின்வருவனவற்றை வங்கிகளிடம் கண்டகின்றதோ அப்போது “டைவர்ஜன்ஸ்” நிகழும்.
    • துல்லியமான மதிப்புடன் இல்லாமல் அதைவிடக் குறைவான மதிப்புடன் பதிவு செய்யப்பட்ட வாராக் கடன்கள்
    • பதிவு செய்யப்படாத வாராக் கடன்கள்
  • இந்த வங்கிகள் இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிக்கை அளித்ததன் காரணமாக RBI ஆனது அவ்வங்கிகளின் 2018-19 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டு அறிக்கையின் போது “டைவர்ஜன்ஸ்” நிலையைக் கண்டறிந்துள்ளது.
  • 2017-18 ஆம் நிதியாண்டில் இந்த வங்கிகள் பழமையான வாராக் கடன்களுக்காக “அதிக அளவு நிதிகளை ஒதுக்கியதன்” காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒதுக்கீடுகள் என்றால் என்ன?
  • கொடுத்த கடன் திருப்பி செலுத்தப்படா விட்டால், வங்கியானது இந்த நிதியை இலாபம் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.
  • வங்கிகள் மேற்கூறியவாறான இழப்பை ஈடுகட்டுவதற்காக வருகின்ற இலாபத்தின் ஒரு பகுதி நிதியை ஒதுக்கி வைத்தல் என்பது ஒதுக்கீடுகள் (Provisions) எனப்படும்.
  • வங்கிகள் இழப்பிலிருந்துத் தப்பிப்பதற்காக ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்