TNPSC Thervupettagam

பதௌயிசம் - அசாமின் BTR பகுதி சமயம்

February 25 , 2025 8 days 69 0
  • அசாமில் உள்ள போடோலாந்து பிராந்தியப் பகுதி (BTR) அரசாங்கம் ஆனது, பல்வேறு விண்ணப்பப் படிவங்களில் மதங்களுக்கான நெடு வரிசையில் 'பதௌயிசம்' என்ற மதத்தினை அதிகாரப்பூர்வ விருப்பத் தேர்வாக சேர்த்துள்ளது.
  • அசாமின் மிகப்பெரிய சமவெளி வாழ் பழங்குடியின மக்களான போடோக்களின் ஒரு பாரம்பரிய மத நம்பிக்கை பதௌயிசம் ஆகும்.
  • இருப்பினும் இந்தப் போடோ சமூகம் காளிச்சரன் பிரம்மாவின் சீர்திருத்த இயக்கங்கள் போன்ற இயக்கங்களை எதிர் கொண்டிருந்தாலும் இது போடோக்களின் மூதாதையர் சார் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
  • இந்த மத நம்பிக்கை அமைப்பு ஆனது, பார் (காற்று), சான் (சூரியன்), ஹா (பூமி), ஓர் (நெருப்பு) மற்றும் ஓக்ராங் (வானம்) ஆகிய ஐந்து கூறுகளை அடிப்படையாகக் கொண்டது.
  • பதௌ மத நம்பிக்கை ஆனது சிஜோவ் தாவரத்தினை (யூபோர்பியா ஸ்ப்ளென்டென்ஸ்) அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்