TNPSC Thervupettagam

பத்தாரி பழங்குடியினர்

August 3 , 2023 352 days 315 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள  “பதாரி பழங்குடி”, “கத்தா பிராமணர்”, “கோலி” மற்றும் “பஹாரி இனக்குழு” ஆகிய நான்கு சமூகத்தினரைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசு ஒரு மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப்பாங்கான தொலைதூரப் பகுதியில் பத்தாரிகள் வாழ்கின்றனர்.
  • இந்த ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மற்ற முக்கியப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியின சமூகங்கள் பூஞ்ச், ரஜோரி, ரியாசி, குப்வாரா, கந்தர்பால், அனந்த்நாக், கிஷ்த்வார் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் அதிகம் காணப்படும் பேகர்வால்கள் மற்றும் குஜ்ஜார்களாகும்.
  • இவர்களில் பேகர்வால் இனத்தவர்கள் என்போர் பெரும்பாலும் நாடோடி வாழ்விகளாக உள்ளனர்.
  • டோக்ராஸ் மற்றும் காஷ்மீரி இனத்தவர்களையடுத்து குஜ்ஜார்-பேகர்வால் இனத்தவர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள மூன்றாவது பெரிய இனக்குழுவினராவர்.
  • இந்த இனத்தவர்க்கு 1991 ஆம் ஆண்டில் சிப்பிஸ் மற்றும் காடிஸ் ஆகிய இரண்டு சிறுபான்மைக் குழுக்களுடன் சேர்த்துப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப் பட்டது.
  • இது இந்தச் சமூகங்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு வழி வகை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்