TNPSC Thervupettagam

பத்திரிகைச் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின் முதன்மைப் பரிசு

May 6 , 2023 442 days 245 0
  • சிறையில் உள்ள மூன்று ஈரானியப் பெண் பத்திரிகையாளர்கள், பத்திரிகைச் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின் முதன்மைப் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர்.
  • நிலூஃபர் ஹமீதி, எலாஹே முகமதி மற்றும் நர்கஸ் முகமதி ஆகியோர் அந்த மூன்று வெற்றியாளர்கள் ஆவர்.
  • ஹமேதி, ஷார்க் எனப்படும் சீர்திருத்தவாத செய்தித்தாள் நிறுவனத்தில் பணி புரிகின்ற நிலையில், ஹம்-மிஹான் எனப்படுகின்ற சீர்திருத்தவாத செய்தித் தாள் நிறுவனத்தில் முகமதி பணி புரிகிறார்.
  • ஈரானில் மிகத் தளர்வாக தலையங்கி அணிந்ததற்காக 22 வயது சிறுமி ஒருவர் அறநெறி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போது உயிரிழந்ததை நிலௌபர் ஹமேதி செய்தி ஆக வெளியிட்டார்.
  • இலாஹே முகமதி அவரது இறுதிச் சடங்கு பற்றி எழுதினார்.
  • நர்கேஸ் முகமதி, பல வருடங்களாகப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் மற்றும் ஈரானின் முக்கியச் செயல்பட்டாளர்களில் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்