TNPSC Thervupettagam

பத்திரிக்கைத் துறையில் நிபுணத்துவத்திற்கான IPI - இந்தியா விருது 2018

November 10 , 2018 2128 days 669 0
  • தி வீக் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் நம்ரதா பிஜி அஹீஜா 2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சர்வதேச பத்திரிக்கை நிறுவன (International Press Institute - IPI) விருதை பத்திரிக்கைத் துறையில் சிறந்த நிபுணத்துவத்திற்காக வழங்கப் பட்டிருக்கின்றார்.
  • தி வீக் பத்திரிக்கையில் நம்ரதா பிஜி அஹீஜா சிறப்பு மூத்த பத்திரிக்கை நிருபர் ஆவார்.
  • இவர் அந்த விருதினை நாகாலாந்தில் உள்ள இரகசிய முகாம்கள் மீதான தனது பிரத்தியேக கட்டுரைத் தொடருக்காக பெற்றார்.
  • இந்த விருது 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும், ஒரு கோப்பையையும், ஒரு பாராட்டுச் சான்றிதழையும் கொண்டதாகும்.
  • இதற்கான தேர்வுக் குழு இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான சோலி சொராப்ஜியால் தலைமை தாங்கப்பட்டது.
  • பத்திரிக்கையில் நிபுணத்துவத்திற்கான IPI இந்தியா விருது 2003 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச பத்திரிக்கை நிறுவனம் சிறந்த சேவையை வழங்கும் இந்திய ஊடக நிறுவனம் அல்லது பத்திரிக்கையாளர்களுக்கு அவர்களது சேவையை கௌரவப்படுத்தி அங்கீகரிக்கும் வகையில் இந்த வருடாந்திர விருதினை ஏற்படுத்தியது.
  • இக்குழுமம் தனது முதல் விருதை 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் செய்தியளித்தமைக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்