TNPSC Thervupettagam

பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் வழங்கப்படும் தண்டனைகளில் இருந்து பெறப்படும் விலக்குகளைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் - 2

November 4 , 2018 2155 days 478 0
  • பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் வழங்கப்படும் தண்டனைகளில் இருந்து பெறப்படும் விலக்குகளைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அனுசரிக்கப்படும் ஒரு தினமாகும்.
  • முக்கிய சமூக விவகாரங்கள் பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை முடிவெடுக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் அளிக்கப்படும் உலகளாவிய குறைவான தண்டனைகள் பற்றிய கவனத்தை இத்தினம் ஈர்க்கின்றது.
  • இவ்வருட சர்வதேச தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது, பணியில் கொல்லப்படும் பத்திரிக்கையாளர்கள் விவகாரத்தின் மீதான விழிப்புணர்வைப் பெரிதாக்க “உண்மை எப்பொழுதும் சாகாது” என்ற பரப்புரையைத் துவக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்