TNPSC Thervupettagam

பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறை

December 23 , 2018 2069 days 595 0
  • வருடாந்திர உலகளவிலான பத்திரிக்கையாளர்கள் மீதான கொடிய வன்முறைகள் மற்றும் தவறாக நடத்துதல் அறிக்கையை எல்லைகள் கடந்த பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Reporters without Borders-RSF/ Reporters Sans Frontières) வெளியிட்டுள்ளது
  • இந்த அறிக்கையின்படி 2018-ல் நடத்தப்பட்ட அளவிற்கு பத்திரிக்கையாளர்கள் மீது இதுவரையில் வன்முறை மற்றும் தவறான முறையில் நடத்துதல் ஆகிய முறைகளில் எப்போதும் தாக்குதல்கள் நடத்தப் பட்டதில்லை.
  • இது 8% அளவில் உயர்ந்து 80% ஐ எட்டியுள்ளது. மேலும் 2017ல் 55 ஆக இருந்த தொழில்நுட்ப பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 சதவீத அளவில் அதிகரித்து 2018-ல் 63 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது முந்தைய 3 வருடங்களில் குறைந்து இருந்தது.
  • இது கடந்த 23 வருட வரலாற்றில் தனது வருடாந்திர பட்டியலில் முதன்முதலாக அமெரிக்காவை மோசமான குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • உலகின் அதிக அளவில் (60 பேர்) பத்திரிக்கையாளர்களை சிறையிலடைக்கும் நாடாக சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த பட்டியலில் பத்திரிக்கையாளர்களை மோசமாக நடத்தும் 5-வது நாடாக இந்தியா உள்ளது.
  • இந்த அறிக்கையானது 1995 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டு வருகிறது.
  • இவ்வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் RSF ஆனது உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டது. அதில் இந்தியா 138வது இடத்தில் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்