2018-ஆம் ஆண்டிற்கான 85 பத்ம விருதுகளின் வழங்கலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2018-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளில் 3 பத்ம விபூஷன் விருதுகளும், 9 பத்ம பூஷன் விருதுகளும், 73 பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
பத்ம விருதுகள்
இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன.
கலை, சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி மற்றும் குடிமை பணிச் சேவை போன்ற பல்வேறு துறைகளில் அளப்பறிய பங்களித்து நாட்டிற்கு பெருமை சேர்ந்த இந்திய குடிமக்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதான பத்ம விருதுகள் பத்ம பூஷண், பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ எனும் 3 வகைப்பிரிவின் கீழ் வழங்கப்டுகின்றன.
நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்து, அடுத்தடுத்த உயர்நிலை மதிப்பில் (High Order) முறையே பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகியவை உள்ளன.
ஆண்டுதோறும் தேசிய குடியரசுத் தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.