TNPSC Thervupettagam

பந்தேல்கண்ட் பகுதியின் முதல் புலிகள் காப்பகம்

October 5 , 2022 655 days 418 0
  • உத்தரப் பிரதேச அரசு அம்மாநிலத்தின் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள ராணிப்பூர் வனவிலங்குச் சரணாலயத்தில் (RWS) நான்காவது புலிகள் காப்பகத்தினை நிறுவ உள்ளதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
  • இந்த வனவிலங்குச் சரணாலயத்தில் அந்தப் பகுதியினைச் சேர்ந்தப் புலிகள் வாழ்வது இல்லை.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் இருந்து புலிகள் அடிக்கடி இந்தச் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.
  • இது துத்வா, பிலிபிட் மற்றும் அமன்கார் (கார்பெட் புலிகள் காப்பகத்தின் தாங்கு மண்டலம்) ஆகியவற்றுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் உருவாக்கப்படும் நான்காவது புலிகள் காப்பகமாகும்.
  • உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பந்தேல்கண்ட் பகுதியில் உருவாக்கப்படும் முதல் புலிகள் காப்பகம் இதுவாகும்.
  • உத்தரப் பிரதேசத்தில் 173 புலிகள் உள்ள நிலையில் துத்வா தேசியப் பூங்காவில் தான் அதிக எண்ணிக்கையில் புலிகள் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் தற்போது 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்