சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பில் (BRI) இருந்து விலகுவதாக பனாமா அதிபர் அறிவித்துள்ளார்.
இந்த மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பானது 2013 ஆம் ஆண்டில் சீனாவால் தொடங்கப் பட்டது.
பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பெரும் நிதி அளிப்பதன் மூலம் பெய்ஜிங் தனது உலகளாவியப் பொருளாதாரச் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக இது செயல்பட்டது.
முன்னாள் அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலாவின் ஆட்சியின் போது 2017 ஆம் ஆண்டில் பனாமா இந்த முன்னெடுப்பில் இணைந்தது.
பனாமா கால்வாய் எனபது, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவினால் கட்டப்பட்டு, 1999 ஆம் ஆண்டில் பனாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது.