பனிச் சிறுத்தைகளின் எண்ணிக்கை மற்றும் புவியியல் வரம்பை மதிப்பிடுவதற்கு இந்தியா தனது முதல் பனிச் சிறுத்தைக் கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.
புலி, சிறுத்தை, சிங்கம் ஆகியவையும் சேர்ந்த ‘பாந்தெரா’ பேரினத்தின் உறுப்பினர் இந்தப் பனிச் சிறுத்தை ஆகும்.
இதன் அறிவியல் பெயர் “பாந்தெரா அன்சியா” என்பதாகும்.
2017 ஆம் ஆண்டில், IUCN இன் சிவப்புப் பட்டியலில் பனிச் சிறுத்தையின் நிலை ‘ஆபத்தான’ என்ற இடத்திலிருந்து ‘பாதிக்கப்படக் கூடியது’ என்ற இடத்திற்கு மாற்றப் பட்டது.
பனிச் சிறுத்தைகளின் உலகளாவிய தொகையில் 10% இந்தியாவில் உள்ளது.