TNPSC Thervupettagam

பனிச் சிறுத்தை பற்றிய இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பின் ஆய்வு

July 29 , 2022 723 days 446 0
  • இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பானது (ZSI), சமீபத்தில் பனிச்சிறுத்தை பற்றிய ஆய்வை மேற்கொண்டது.
  • பனிச் சிறுத்தைகளுக்கும், நீலமலையாடு மற்றும் சைபீரிய ஐபெக்ஸ் காட்டாடு போன்ற அதன் இரை இனங்களுக்கும் இடையேயான வாழ்விடப் பயன்பாட்டில் ஒரு வலுவான தொடர்பு உள்ளது.
  • அந்தப் பகுதிகளை அதன் இரை இனங்கள் நன்கு பயன்படுத்தினால், அங்கு பனிச் சிறுத்தைகள் காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக அமையும்.
  • வேட்டையாடப்படும் இனங்களைப் பொறுத்தவரையில், பனிச்சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் போது இந்த இரை இனங்களை அங்குக் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகும்.
  • பனிச் சிறுத்தையானது IUCN சிவப்புநிறப் பட்டியலில் 'பாதிக்கப்படக் கூடிய இனமாக' வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தியாவில், இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் இது காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்