TNPSC Thervupettagam

பனிப்பாறை உருகுதல் பற்றிய ஆய்வு – உலக வங்கி

June 9 , 2021 1139 days 652 0
  • உலக வங்கியானது  இமாலயம், காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைத்தொடர்கள் மீதான கருப்புக் கரிமத்தின் (கருப்பு கார்பன்) தாக்கம் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
  • உலகளாவிய சராசரி பனிக்கட்டிகளை விட இந்தப் பகுதிகளில் காணப்படும் பனிப் பாறைகள் மிக வேகமாக உருகுவதாக இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கைக்கு இமாலயத்தின் பனிப்பாறைகள், பருவநிலை மாற்றம், கருப்புக் கரிமம் மற்றும் பிராந்திய நெகிழ்திறன்எனத் தலைப்பிடப்ப ட்டுள்ளது.

முக்கியத் தகவல்கள்

  • மனித நடவடிக்கைகளால் உருவான கருப்புக் கரிமங்களின் படிவுகள் (Black Carbon) ஆனது இமாலயப் பகுதிகளில் பனிப்பாறை மற்றும் பனிக்கட்டிகள் உருகும் வேகத்தை துரிதப் படுத்துகின்றன.
  • இமாலயம், காரகோரம் மற்றும் இந்துகுஷ் மலைத்தொடர்களில் உள்ள பனிப் பாறைகள் பின்னடையும் வீதமானது மேற்கில் ஆண்டுக்கு 0.3 மீட்டராகவும் கிழக்கில் ஆண்டுக்கு 1.0 மீட்டராகவும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்