மத்திய அரசானது தேசிய பனிப்பாறை ஏரி உடைப்பு சார்ந்த வெள்ள அபாயக் குறைப்புத் திட்டத்திற்கு (NGRMP) அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் அமைந்துள்ள இமயமலைத் தொடர்களில் ஏறக்குறைய 7,500 பனிப் பாறை ஏரிகள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் சில தொலை உணர்வு கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆனது, இடரைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகளுக்காக 189 "அதிக ஆபத்து நிலையில் உள்ள" பனிப்பாறை ஏரிகளின் பட்டியலை இறுதி செய்துள்ளது.
மத்திய நீர் வள ஆணையம் (CWC) ஆனது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததத்தின் அறிக்கையில் 902 பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுவதாகக் கூறியது.