TNPSC Thervupettagam

பனிப்பொழிவிலிருந்து மின்சாரம்

April 22 , 2019 1917 days 544 0
  • கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் பனிப்பொழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய முப்பரிமாண வடிவில் அச்சிடப்பட்ட கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் செலவு குறைந்த கருவியானது  சிறிய, மெலிதான மற்றும் வளையக்கூடிய வகையில் நெகிழித் தாள் போன்றது. இதற்கு மின்கலன் தேவையில்லை என்பதாலும் இது தனது சொந்த சக்தியை வழங்குவதாலும் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தப் படக்கூடியது.
  • இந்தக் கருவியானது பனி அடிப்படையிலான சிறிய ரக உராய்வு மின்னியற்றி அல்லது “snow TENG “ என அழைக்கப்படுகிறது.
  • இது நிலைமின்சாரம் வழியாக மின்னூட்டத்தினை உற்பத்தி செய்து எலக்ட்ரான் பரிமாற்றங்களிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்