பனிப் பேரூழிக் கால காண்டாமிருகம்
January 7 , 2021
1423 days
713
- ரஷ்யாவில் சைபீரியாவின் யாகுட்டியாவில் விஞ்ஞானிகளால் முழுமையாக சிதைவுறாத ஒரு காண்டாமிருகத்தின் உடல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- இது 20,000 முதல் 50,000 ஆண்டுகள் வரை பழமையானது என்று கூறப் படுகிறது.
- ரஷ்யாவில் பெர்மாஃப்ரோஸ்ட் (Permafrost) என்ற நிரந்தரப் பனி உருகுவதால் இது தெரிய வந்தது.
- ரஷ்யாவின் சுமார் 65% பகுதி நிரந்தரப் பனி அமைப்பால் சூழப்பட்டுள்ளது.
- பெர்மாஃப்ரோஸ்ட் என்பது குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு முற்றிலும் உறைந்து கிடைக்கும் ஒரு வகை நிலமாகும்.
- பெர்மாஃப்ரோஸ்ட் ஆனது வெப்பநிலை மற்றும் காலத்தின் அடிப்படையில் வரையறுக்கப் படுகிறது.
- பெர்மாஃப்ரோஸ்ட் ஆனது ரஷ்யா, கனடா மற்றும் அமெரிக்காவில் (அலாஸ்கா) காணப் படுகிறது.
Post Views:
713