கிரீன்லாந்தின் பனிப்படலத்தில் மர்மமான மிகப்பெரிய சில வைரஸ்களை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வைரஸ்கள் 1981 ஆம் ஆண்டில் பெருங்கடலில் முதல் முறையாக கண்டறியப் பட்டன.
இவை பொதுவாக பெருங்கடலில் உள்ள பாசிகளைத் தாக்கக் கூடியது.
ஆனால் இத்தகையப் பனி வாழ்விடங்களில் மிகப்பெரிய வைரஸ்கள் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த மிகப்பெரிய வைரஸ்கள் ஒருவித இரகசிய ஆயுதமாகச் செயல்படும் என்றும், பனி உருகுவதைக் குறைக்க உதவுவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
வழக்கமான வைரஸ்கள் 20-200 நானோமீட்டர் அளவைக் கொண்டிருக்கும், அதே சமயம் ஒரு வழக்கமான பாக்டீரியா என்பது 2-3 மைக்ரோமீட்டர்கள் வரையிலான அளவில் தான் இருக்கும்.
வேறு விதமாக கூறுவதென்றால், ஒரு சாதாரண வைரஸ் என்பது பாக்டீரியாவை விட 1,000 மடங்கு சிறியதாகும்.
ஆனால் இந்த மிகப்பெரிய வைரஸ்கள் சுமார் 2.5 மைக்ரோமீட்டர் அளவில் வளரும் என்ற நிலையில் இது பெரும்பாலான பாக்டீரியாக்களை விட பெரியதாகும்.