இந்த அறிக்கையானது சர்வதேசப் பனி மண்டல பருவநிலை முன்னெடுப்பு (ICCI) என்ற அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து பகுதியின் பனிப்பரவல் ஆனது, தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 30 மில்லியன் டன் பனியை இழந்து வருகிறது.
மேலும், வடக்கு கிரீன்லாந்தில் உள்ள பனிப்படிவு அடுக்குகள் 1978 ஆம் ஆண்டு முதல் அதன் மொத்த அளவில் 35% படிவுகளை இழந்துள்ளன.
உலக கடல் மட்ட உயர்வு விகிதம் ஆனது கடந்த 30 ஆண்டுகளில் சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தற்போதையப் போக்குகளின்படி, 2050 ஆம் ஆண்டில் இது ஆண்டிற்கு 6.5 மில்லி மீட்டர் என்ற வீதத்தில் அதிகரிக்கும்.
வெனிசுலா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய இரு பகுதிகள் நவீன காலத்தில் அவற்றின் இறுதி பனிப்பாறைகளை இழந்தன.
பனி மண்டலம் (தாழ் வெப்ப மண்டலம்) என்பது பூமியில் உள்ள பனி அல்லது பனிப் பகுதிகளைக் குறிக்கிறது என்ற நிலையில் இந்த பகுதியானது ஆண்டின் ஒரு பகுதியில் 0 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் காணப்படும்.