TNPSC Thervupettagam

பன்சாகர் கால்வாய்த் திட்டம்

July 21 , 2018 2323 days 674 0
  • உத்திரப் பிரதேசத்தில் உள்ள மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் 171 கிலோமீட்டர் நீளமுள்ள பன்சாகர் கால்வாய்த் திட்டத்தினை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
  • பன்சாகர் அணைக்கட்டு திட்டம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் அரசுகளின் கூட்டு முயற்சியாகும்.
  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள சோன் ஆற்றின் மேல் கட்டப்படும் இது ஒரு பல்நோக்கு ஆற்றுப்பள்ளத்தாக்கு திட்டம் ஆகும்.
  • இந்த கால்வாய் அமைப்பு மத்தியப் பிரதேசத்தின் சதோல் மாவட்டத்திலிருந்து அத்வா தடுப்பு அணை, மேஷா அணைக்கட்டு மற்றும் ஜிர்கோ நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு நீரினைக் கொண்டு செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்