TNPSC Thervupettagam

பன்னாட்டுக் கட்டமைப்பு இணை தொடரமைப்புகள்

September 25 , 2023 301 days 195 0
  • "ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு (OSOWOG) திட்டத்திற்கான பன்னாட்டுக் கட்டமைப்பு இணை தொடரமைப்புகள்" என்ற மாநாடு ஆனது சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த முன்னெடுப்பானது பல்வேறு நாடுகளுக்கான ஆற்றல் விநியோகத்தை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பரிமாற்றப் பயன்படும் ஒரு பொதுவான கட்டமைப்பு மூலம் வெவ்வேறு பிராந்தியக் கட்டமைப்புகளை இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது சர்வதேச சூரியசக்திக்  கூட்டணி மற்றும் உலக வங்கி குழுவுடன் இணைந்து இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளின் அரசாங்கங்களால் முன்னெடுத்து மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சூரிய சக்தியைப் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்