பன்னாட்டு அளவில் ஒழுங்கமைக்கப்பட்டக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச தினம் - நவம்பர் 15
November 19 , 2024 7 days 75 0
இந்த ஆண்டு ஆனது இந்த சர்வதேசத் தினம் முதன்முதலில் அனுசரிக்கப்படுவதைக் குறிக்கிறது.
அனைத்து வகையான பன்னாட்டு ஒழுங்கமைக்கப்பட்டக் குற்றங்களாலும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதையும் ஒரு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைதி, உலகப் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தைக் குறை மதிப்பிற்கு பெருமளவு உட்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்டக் குற்றங்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு உலகளாவிய ஒற்றுமையின் ஒரு அவசரத் தேவையை இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
பன்னாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை ஆனது, 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "It’s time we pull together to push back" என்பதாகும்.