TNPSC Thervupettagam

பன்னா உயிர்க் கோளக் காப்பகம்

November 4 , 2020 1356 days 3514 0
  • யுனெஸ்கோ ஆனது பன்னா புலிகள் காப்பகத்திற்கு  “உயிர்க் கோளக் காப்பகம்” என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
  • பன்னா என்பது இந்தியாவில் யுனெஸ்கோவின் 12வது உயிர்க்கோளக் காப்பகமாகும்.
  • இது கடந்த 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையைச் சுழியத்திலிருந்து 54 ஆக உயர்த்தியுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில், இங்குள்ள புலிகளின் முழு எண்ணிக்கையானது வேட்டையாடுதல் மூலம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு இருந்தது.
  • 2 பெண் புலிகள் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாந்தகார்க் தேசியப் பூங்கா மற்றும் கன்ஹா தேசியப் பூங்கா ஆகியவற்றிலிருந்து இங்கு இடமாற்றம் செய்யப் பட்டன.
  • பன்னா ஆனது 2011 ஆம் ஆண்டில் இந்தியாவினால் உயிர்க்கோளக் காப்பகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இது பச்மார்கி மற்றும் அமர்கந்தக் ஆகியவற்றிற்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூன்றாவது காப்பகம் கும்.

சமீபத்தையப் பிரச்சினை

  • மத்திய அரசானது மத்தியப் பிரதேச மாநில அரசு மற்றும்  உத்தரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் காப்பகத்தின் வழியாக கென் நதியை பெட்வா நதியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இது நாட்டின் முதலாவது நதிநீர் இணைப்புத் திட்டமாகும்.
  • இது 283 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தௌத்கான் அணையின் கட்டமைப்பை உள்ளடக்கியுள்ளது.
  • இது பந்தேல்கண்ட்டின் வறட்சிப் பகுதிகளுக்கு நீர் அளிக்கின்றது.
  • பன்னா ஆனது காடுகள் மற்றும் சதுப்பு நிலப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது மத்தியப் பிரதேசத்தில் பன்னா மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களில் 576 கிலோ மீட்டர் அளவில் பரவியுள்ளது.
  • இது ஒரு முக்கியமான புலிகள் வாழ்விடம் மற்றும் பன்னா புலிகள் காப்பகத்தைக் கொண்டுள்ளது.
  • இது கஜுராகோ நினைவுச் சின்னங்கள் என்ற  ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச்  சின்னத்தையும் கொண்டுள்ளது.
  • இது 1993 ஆம் ஆண்டில் இந்தியாவின் 22வது புலிகள் காப்பகமாகவும் மத்தியப் பிரதேசத்தில் 5வது புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப் பட்டது.
  • இந்தியாவில் உள்ள 18 உயிர்க் கோளக் காப்பகங்களில் 12 காப்பகங்கள் உலக உயிர்க்கோளக் காப்பக வலையமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்