பன்றிப் பண்ணை வளர்ச்சித் திட்டமானது மேகாலயாவில் தொடங்கப்பட விருக்கின்றது. மாநில அரசுடன் இணைந்து தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் (NCDC - National Cooperative Development Corporation) இதற்கு நிதியளிக்கப் படுகின்றது.
இது வடகிழக்குப் பிராந்தியம் முழுவதிலும் இறைச்சியின் உள்ளூர் இருப்பை அதிகரிக்கும் என்றும் அதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
பன்றி வளர்ப்பு என்பது வட கிழக்கு இந்தியாவின் ஒரு முக்கியமான கூறாகும். இந்தியாவில் உள்ள மொத்தப் பன்றிகளில் 28 சதவிகிதப் பன்றிகள் இங்கு வளர்க்கப் படுகின்றன
ஹாம்ப்சியர், எச்எஸ்எக் 1, பெரிய வெள்ளை நிறம் கொண்ட யார்க்சியர் இனப் பன்றி, குரோக் மற்றும் லேண்ட்ரேஸ் ஆகியவை இங்கு பொதுவாக வளர்க்கப்படும் பன்றி இனங்களாகும்.