TNPSC Thervupettagam

பன்றிப் பண்ணை வளர்ச்சித் திட்டம் - மேகாலயா

August 22 , 2019 1924 days 658 0
  • பன்றிப் பண்ணை வளர்ச்சித் திட்டமானது மேகாலயாவில் தொடங்கப்பட விருக்கின்றது. மாநில அரசுடன் இணைந்து தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் (NCDC - National Cooperative Development Corporation) இதற்கு நிதியளிக்கப் படுகின்றது.
  • இது வடகிழக்குப் பிராந்தியம் முழுவதிலும் இறைச்சியின் உள்ளூர் இருப்பை அதிகரிக்கும் என்றும் அதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
  • பன்றி வளர்ப்பு என்பது வட கிழக்கு இந்தியாவின் ஒரு முக்கியமான கூறாகும். இந்தியாவில் உள்ள மொத்தப் பன்றிகளில் 28 சதவிகிதப் பன்றிகள் இங்கு வளர்க்கப் படுகின்றன
  • ஹாம்ப்சியர், எச்எஸ்எக் 1, பெரிய வெள்ளை நிறம் கொண்ட யார்க்சியர் இனப் பன்றி, குரோக் மற்றும் லேண்ட்ரேஸ் ஆகியவை இங்கு பொதுவாக வளர்க்கப்படும் பன்றி இனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்