சமீபத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் “பம்பாய் இரத்த வகையின்” தேவையானது தற்செயலாக அதிகரித்துள்ளது. ஆனால் அதன் விநியோகமானது குறைந்துள்ளது.
அரிய பம்பாய் இரத்த வகையானது 1952 ஆம் ஆண்டில் பம்பாயில் டாக்டர் ஒய் எம் பெண்டே என்பவரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இது “hh” இரத்த வகை என்றும் அழைக்கப்படுகின்றது.
இது ஆன்டிஜென் (நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி) Hஐ வெளிப்படுத்துவதில் குறைபாடுடையதாக உள்ளது. அதாவது இதன் RBC ஆனது ஆன்டிஜென் Hஐக் கொண்டிருக்கவில்லை.
இந்த இரத்த வகையைக் கொண்ட நபர்கள் பம்பாய் HH தோற்ற வகைமை அல்லது பினோடைப்பைக் கொண்ட தனிநபர்களிடமிருந்து தன்னியக்க இரத்தம் அல்லது அவர்களின் இரத்தத்துடன் மட்டுமே அதனை மாற்ற முடியும். இந்த இரத்த வகை மிகவும் அரிதானது ஆகும்.
இந்த இரத்தமானது 40,00,000 லட்சம் நபர்களில் 1 நபருக்கு மட்டுமே இருப்பதால் இது மிகவும் அரிதானதாக விளங்குகின்றது.
பாம்பே இரத்த வகை ஏன் தனித்துவமானது?
அனைத்து இரத்த வகைகளும் (O, A, B, AB) இரத்தத்தில் ஆன்டிஜென் hஐக் கொண்டுள்ளன.
ஆனால் மிகச் சில நபர்கள் ஆன்டிஜென் hஐக் கொண்டிருக்கவில்லை.
அதற்குப் பதிலாக அவர்களிடம் “நோய் எதிர்ப்பொருள்” h உள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு வேறு எந்த இரத்தமும் கொடுக்க முடியாது.