'பயிர்க் காப்பீட்டை' அதிகரிப்பதற்கான புதிய முன்னெடுப்புகள்
March 6 , 2024 267 days 295 0
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது, பயிர்க் காப்பீட்டை அதிகரிப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த விவசாயச் சமூகத்துக்கு உதவுவதற்காகவும் பின்வரும் மூன்று புதிய முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
கிசான் ரக்சக் உதவி எண் 14447 மற்றும் இணைய தளம்,
வேளாண் காப்பீட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சோதனைக் கட்டமைப்பு சார்ந்த SARTHI தளம் மற்றும்
கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) தளம்
KRPH 14447 தளமானது வெளிப்படையான தகவல் தொடர்பு மற்றும் இழப்பீடு வழங்கீட்டில் தாமதங்கள் மற்றும் காப்பீடு சார்ந்த வினவல்கள் தொடர்பான குறைகளுக்கான நிகழ்நேரத் தீர்வு ஆகியவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் மிகவும் பன்மொழி சார்ந்த தகவல் தொடர்பு வசதியினை வழங்குகிறது.
SARTHI தளம் ஆனது விவசாயிகளுக்கும் கிராமப்புற இந்தியாவிற்குமென மிகவும் வெளிப்படையான வகையில் வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்தின் மானியம் கொண்ட PMFBY திட்டம் உள்ளிட்ட காப்பீட்டுத் தயாரிப்புகளின் விரிவான தொகுப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
SARTHI என்பது வேளாண்மை மற்றும் கிராமப்புற பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் காப்பீட்டுக்கான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஒரு சோதனைக் கட்டமைப்பினைக் குறிக்கிறது.
2016 ஆம் ஆடனில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்பது அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும்.